மது குடிக்க தண்ணீர் தர மறுத்ததால், தொழிலாளியை பாட்டிலால் தாக்கியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி நாய்க்கன்காடு பகுதியில் கூலிதொழிலாளியான தர்மராஜ்(40) என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கு அருகில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன்(54) என்பவரும் அந்த பகுதிக்கு மதுகுடிக்க வந்துள்ளார். அப்போது தர்மராஜ் முருகனிடம் மது கலந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு முருகன் […]
