பாகிஸ்தான் அரசின் யோகா பற்றிய பதிவிற்கு அந்நாட்டின் மதவாதிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச யோகா தினத்திற்காக பல உலக நாடுகள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டன. அதேபோல் பாகிஸ்தானும் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “யோகா மூலம் மன நிறைவு, நிலையான மாற்றம் உண்டாகிறது. இரு விஷயங்கள் உடற்பயிற்சி உலகத்தில் மிகவும் முக்கியமானது. அதன்படி யோகா மூலமாக மனது, உடல் புத்துணர்வு பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்த கருத்திற்கு அந்நாட்டின் மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். […]
