Categories
மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மலேசியாவிற்கு தப்பி செல்ல முயற்சி: 10 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 2,300 பேரில் 500 பேருக்கு கொரோனா அறிகுறி: டெல்லி முதல்வர் தகவல்!

டெல்லி மர்கஸ் மசூதியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட சுமார் 2300 பேரில், 500 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று காணொலி மூலம் மக்களிடம் பேசிய அவர், மீதமுள்ள 1800 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள் என கூறினார். அவர்கள் அனைவரையும் நாங்கள் சோதித்து வருகிறோம் என்றும், அவற்றின் முடிவுகள் 2-3 நாட்களில் வரும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்ட 1,203 பேர் கண்டறியப்பட்டனர்… உத்தரபிரதேசம் அரசு

டெல்லியில் நடந்த தப்லீகி ஜமாஅத் மதநிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1203 பேர் அடையாளம் காணப்பட்டதாக உத்தரபிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில், 897 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இதுவரை 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வந்த தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 1,400 பேரில் 1,300 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்: மஹாராஷ்டிர அமைச்சர்!

மகாராஷ்டிராவில் இருந்து 1,400க்கும் மேற்பட்டோர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1,300 பேரை கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். அவர்களின் மாதிரிகள் COVID19 சோதனைக்கு சேகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுதவிர, மாநிலத்தில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கவனிக்கும் பொறுப்பையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்று கூறினார். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் உட்பட அனைத்து வசதிகளையும் வழங்கிவருவதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

தப்லீகி ஜமா அத் மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தற்கொலை முயற்சி… காப்பாற்றிய மருத்துவர்கள்!

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மர்கஸ் மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, […]

Categories
தேசிய செய்திகள்

“நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் பங்கேற்ற 62 வெளிநாட்டவர் கர்நாடகாவிற்கும் வந்துள்ளனர்”: அமைச்சர் ஸ்ரீராமுலு

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக இந்த மதக்கூட்டம் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற 1,500 […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிததாக 17 பேருக்கு கொரோனா உறுதி… சிலர் டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்பு: மொத்த பாதிப்பு 40!

ஆந்திரமாநிலத்தில் நேற்று இரவு 9.00 மணி அளவில் கிடைத்த தகவலின் படி, புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் டெல்லியில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளார். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா […]

Categories

Tech |