தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளின் பங்களிப்புடன் 2017ம் ஆண்டு குடிமராமரிப்பு திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண் எடுக்கப்பட்டு விவசாயிகள், மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் […]
