கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 102 வயது மூதாட்டி ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவை காரமடை சிக்கரம்பலயம் என்ற பகுதியில் 102 வயது செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவர் நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் மூதாட்டியை சோதனை செய்த போது சிறிய கேன் ஒன்றில் மண்ணெண்ணெய் இருப்பதை கண்டனர். இதனையடுத்து போலீசார் மூதாட்டியிடம் இருந்து மண்ணெண்ணெய் பறிமுதல் செய்தார்கள். அதன் […]
