பட்டா கேட்டு தாய் மற்றும் மகன் இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட ஆண்டவர் நகர் பகுதியில் கடந்த 1989-ஆம் ஆண்டு வறுமை கோட்டுக்கு கீழ் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டா அரசின் சார்பாக வழங்கப்பட்டது. இவ்வாறு பட்டா பெற்ற பலர் அங்கு வீடுகள் கட்டி குடியேறினர். எனினும் பலர் வீடுகள் கட்டாமல் இருக்கின்றனர். மேலும் சிலர் தங்களுடைய வீட்டுமனைகளை பிறருக்கு விற்றுவிட்டு சென்று […]
