சபரிமலை கோவில் நடையானது நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று(நவ..17) அதிகாலை மண்டலகாலம் ஆரம்பமானது. 4 வருடங்களுக்கு பிறகு சபரிமலை முழுமையான சீசனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. கார்த்திகை 1ஆம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜை மண்டல காலம் ஆகும். இந்த வருடம் சீசனுக்காக நேற்று மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன்பின் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அதன்பின் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி […]
