தென்மேற்கு பருவமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மலைப் பாதைகளில் மண்சரிவு ஏற்படுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே அதை சீரமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை காரணமாக பெரியகுளம் போகும் அடுக்கம் மலைப் பாதையில் குருடிக்காடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து […]
