தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து வந்த லால் தற்போது தனது முழு கெட்டப்பை மாற்றி நடித்து வருகிறார். “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் லால். அதன்பின் சண்டைக்கோழி, மருதமலை, ஓரம் போ உள்ளிட்ட படங்களில் மிரட்டலான கதாபாத்திரத்தில் லால் நடித்திருந்தார். மலையாள படங்களில் ஹீரோவாக நடித்த லால் பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லனாகவே நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மணிரத்னம் இயக்கிவரும் “பொன்னியின் செல்வன்” படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். […]
