மணிரத்தினம் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி நடித்த தளபதி திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் படமாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசும்போது பொன்னியின் செல்வன் கதையில் என்னை வந்தியதேவனாக நினைத்து பார்த்தது உண்டு அதாவது மணிரத்னம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்கியவுடன் அதில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வையுங்கள் […]
