திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணை உள்ளது. அணைக்கு அருகில் இயற்கை எழில் கொஞ்சும் அருவியும் உள்ளது. இந்த அணை கட்டும் போதே அதன் அருகில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள், சுற்றுலா பயணிகளை கவரும் சிலைகள், காட்சி கோபுரம், ஓய்வுக்கூடம் போன்ற அம்சங்களுடன் பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூங்கா முறையான பராமரிப்பில்லாததால் அங்குள்ள சிலைகளை […]
