மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லோடு ஆட்டோவில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோடு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் வசிக்கும் செல்வின்ராஜா, நாராயணன், முருகன் […]
