மணல் கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மினிவேனை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது மினிவேனில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மினிவேன் டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மினிவேன் டிரைவர் காட்பாடி விருதம்பட்டை பகுதியில் வசிக்கும் ஜேம்ஸ் என்பது […]
