மணல் கடத்தி வந்த டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. அங்கு மணல் கடத்துவதாக தாசில்தாரான ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார், துணை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோர் அணைக்கட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மணலுடன் ஒரு டிராக்டரும், ஜே.சி.பி எந்திரமும் சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் அதிகாரிகள் […]
