மணல் கடத்திய டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மணல் கடத்துவதாக கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அதிகாரிகள் மற்றும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னா குளம் ரெகுநாதபுரம் பகுதிகளில் 2 டிராக்டர்களில் மணல் கடத்தியதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அதன்பிறகு அதிகாரிகளை கண்டதும் மணல் கடத்திய 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு தகவல் […]
