அனுமதி இல்லாமல் மணல் கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததோடு தப்பிச் சென்ற மூன்று பேரை வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் பகுதியிலிருந்து தடையை மீறி, மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 4 பேர் இணைந்து சாக்கு மூட்டையில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நான்கு நபர்களும் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து […]
