விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த இளைஞனை போலீசார் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் ஆணையின்படி வருவாய்த்துறையினர் திருத்தங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மணல் அள்ளி வந்த டிராக்டரை வருவாய் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வருவாய் துறையினர் மணல் அள்ளியதற்கான அனுமதி சீட்டு கேட்டுள்ளனர். இதனையடுத்து டிராக்டரை ஒட்டி வந்த சாமிநத்தம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி அனுமதி சீட்டு […]
