திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதரேயன்பட்டி கண்மாயில் இரண்டு பேர் டிராக்டர் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதுகுறித்து விளாம்பட்டி காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு பேரையும் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அந்த […]
