கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சிவசக்தி. இவர் அழகு நிபுணராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் சிவசக்தி, திருமண நிகழ்விற்காக மணமகளுக்கு அலங்காரம் செய்வதற்காகப் பொள்ளாச்சியில், இருந்து ஈரோட்டிற்குப் பேருந்தில் சென்றுள்ளார். பின்னர் பேருந்து பல்லடத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிவசக்தி எழுந்துள்ளார். அந்நேரம் எதிர்பாராத விதமாகப் பேருந்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தியுள்ளார். பிறகு கீழே சென்று பார்த்தபோது அவர் […]
