மணப்பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் மணமகன் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த டாக்டர் டியாகோ ரெபெல்லா(33). இவருக்குக்கும், விட்டர் புவெனா என்ற பெண்ணுக்கும் திருமணம் பேசிய நிலையில் கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. எனவே திருமணத்திற்காக டியாகோ கடற்கரையோர ஹோட்டல் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக விட்டர் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் திருமணமும் நின்று போய்விட்டது […]
