ஒடிசா மாநிலத்தில் தாய் வீட்டை விட்டு புறப்படும்போது மணமகள் அழுது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்திலுள்ள ஜிலுண்டா கிராமத்தில் வசித்து வரும் குப்தேஸ்வரி சாஹீ என்ற பெண்ணுக்கு பலங்கிர் மாவட்டத்தில் உள்ள டெட்டல்கான் கிராமத்தில் வசித்து வரும் பிசிகேசனுடன் கடந்த வாரம் வியாழக்கிழமை திருமணம் நடந்தது. அதனை தொடர்ந்து மணப்பெண்ணை மாமியார் வீட்டிற்கு அழைத்துச்செல்லும் சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது தாய் தந்தையரை பிரிந்து செல்வதை நினைத்து நீண்ட நேரமாக மணப்பெண் குப்தேஸ்வரி […]
