இறந்த தாயின் உடலை மகன் சக்கர நாற்காலியில் வைத்து மயானத்திற்கு கொண்டு வந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி, மகன் முருகானந்தம். முருகானந்தம்(60) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் பிறகு அவர் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் சென்று நான்கு வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் முருகானந்தம் […]
