பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டமானது இன்று முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்க உள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை […]
