பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பாக முதல்வரின் ஆணைக்கிணங்க மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருக்கும் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது, இந்த எந்திரத்தின் மூலம் ரூபாய் பத்து செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம். திருவள்ளூரில் ஒரு […]
