வங்காளதேசத்தில் உள்ள ஒரு மசூதியில் திடீரென ஏசி வெடித்து சிதறியதால் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வங்காளதேசத்தின் தலைநகரான டாக்கா அருகே இருக்கின்ற நாராயண்கஞ்ச் என்ற நகரில் மூன்று அடுக்கு மாடிகளை கொண்ட மசூதி ஒன்று அமைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவே வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடந்தது. அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மசூதியில் இருந்த ஏசி திடீரென வெடித்து சிதறியது. அதன் பின்னர் தொடர்ந்து ஐந்து […]
