இத்தாலி நாட்டு நீதிமன்றம் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் 11 இந்திய மீனவர்கள் கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக என்ரிகா லாக்ஸி என்ற இத்தாலி சரக்கு கப்பல் சென்றது. அதில் இத்தாலி கடற்படையை சேர்ந்த மசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரானே […]
