தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின் படி,தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கிருந்து வரும் மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
