புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் திமுக எம்எல்ஏவுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் மேஜை, நாற்காலி கொடுக்காமல் சட்டப்பேரவை செயலகம் பாரபட்சம் செய்வதால் திமுக சம்பத் தரையில் அமர்ந்து மக்கள் பணியை கவனித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநில சட்டமன்றத்தில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தனித்தனியே அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத்திற்கு 10 அடிக்கு 10 அடி அளவிலான அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு மேசை, நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. […]
