மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லீஸ் நகர் மற்றும் தத்தனேரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மக்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று புதிதாக அவ்வழித்தடத்தில் 2 பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அரசு பேருந்தில் பொதுமக்களுடன் சேர்ந்து அமைச்சர் பிடிஆர் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த 50 நிர்வாகிகளும் பயணம் செய்தனர். […]
