தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 825 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றம் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கமுதி, திருவாடனை ஆகிய இடங்களில் 9 அமர்வுகளின் கீழ் நடைபெற்றது. இந்நிலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், […]
