உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் எமரால்ட் கோர்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் சட்டவிரதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த இரு கட்டிடங்களையும் இடித்து தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பு வளகங்களானது இன்று பிற்பகல் 2:30 மணிக்கு வெடிவைத்து தரமாக்கப்படவுள்ளது. இதற்காக 3700 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை […]
