ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கொசத்தலை ஆற்றில் தரைப்பாலத்தில் கட்டப்படும் பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலை ஆறு இருக்கின்றது. இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர் 16 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படும். இந்த ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் கொசுத்தலை ஆற்றின் மீது இருக்கும் தரைப்பாலம் மூழ்கிவிடும். அப்போது பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு மாற்று வழியில் செல்லும் நிலை இருக்கின்றது. […]
