மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டார். இவர் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் நிலப் பட்டா, வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு வசதி போன்ற 213 மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
