அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். இந்த பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகை பறிப்பு, திருட்டு போன்ற குற்ற செயல்களை தடுப்பதற்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு திருடர்களின் கைவரிசை குறைந்துள்ளது. […]
