Categories
உலக செய்திகள்

ஒரு பக்கம் போராட்டம்…. ஒரு பக்கம் கட்டாயத் தடுப்பூசி சட்டம் அமல்… ஆஸ்திரிய அரசு அதிரடி…!!!

மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் ஆஸ்திரிய நாட்டில் 18 வயதுக்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரிய நாட்டில் சுமார் 72% மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசியளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் தங்கள் உடம்பில் எந்த மருந்தை செலுத்த வேண்டும் என்பது தங்களின் விருப்பமாகத்தான் இருக்க வேண்டும். ஆட்சியாளர்களின் விருப்பமாக இருக்கக் கூடாது என்று போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். எனினும், கொரோனா தடுப்பூசி கட்டாய சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன் மூலம்  தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்களுக்கு, 600 யூரோக்களிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

சூடானில் வெடித்த கலவரம்…. 2 பேர் உயிரிழப்பு…. ராஜினாமா செய்த பிரதமர்….!!

சூடானில் மக்கள் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்ததில் பிரதமர் அப்தல்லா ஹம்டோக், பதவி விலகியுள்ளார். சூடான் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அன்று நாட்டின் ராணுவம், இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து அவசர நிலை பிரகடனம் செய்தது. மேலும், பிரதமர், அப்தல்லா ஹம்டோக்வை வீட்டில் சிறை வைத்தனர். இதனை கடுமையாக எதிர்த்து, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் பலனாக, பிரதமர் கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் பதவியில் அமர்ந்தார். ஆனால், அவர் ராணுவத்துடன் இணைந்து அதிகாரப்பகிர்விற்கு ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

“கோவிட் பாஸ்” சான்றிதழ் கட்டாயமா?…. அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்……. எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்….!!!!

உணவகம், பார், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு “கோவிட் பாஸ்” சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்பெயினில் கொரோனா தடுப்பூசி கிட்டத்தட்ட 80 சதவீத மக்களுக்கு போடப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் பேரில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே அந்நாட்டு அரசு “கோவிட் பாஸ்” என்ற சான்றிதழை உணவகம், பார், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது. இந்த கடுமையான கட்டுப்பாடுகளால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான […]

Categories
உலக செய்திகள்

“ஆர்ப்பாட்டக்கார்கள் மீது துப்பாக்கிசூடு தாக்குதல்!”.. 15 பேர் உயிரிழப்பு.. சூடான் இராணுவத்திற்கு அமெரிக்கா கண்டனம்..!!

சூடானில் மக்கள் ராணுவ அதிகாரத்தை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு 15 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடானில் கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து ராணுவம் மற்றும் மக்கள் கலந்த கூட்டணி ஆட்சி தான் நடந்து வந்தது. அதில், அப்துல்லா ஹம்டோ நாட்டின் பிரதமராக இருந்தார். ஆனால் கடந்த மாதம் 25ஆம் தேதியன்று கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி, ஃபடக் அல்-பர்ஹன் என்ற ராணுவ தளபதி ஜெனரல் […]

Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி!”.. ஆயிரக்கணக்கான மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..!!

ஆஸ்திரேலியாவில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆஸ்திரேலிய நாட்டில் கட்டிட பணியாளர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்தது. இந்நிலையில், அரசின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து விக்டோரியா மாகாணத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சர்வாதிகாரம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை எதிர்த்து முழக்கமிட்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் எவரும் […]

Categories
உலக செய்திகள்

மியான்மர் இராணுவத்தின் நடவடிக்கைகள்.. அடைக்கலம் தேடிச் சென்ற அதிகாரிகள்.. திருப்பி அனுப்பக்கோரி இந்தியாவிற்கு கடிதம்..!!

மியான்மர் நிர்வாகம், எல்லை தாண்டி அடைக்கலத்திற்காக சென்ற காவல்துறை அதிகாரிகளை திரும்ப அனுப்ப கோரி இந்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.   மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சி அறிவித்த உத்தரவுகளை காவல்துறை அதிகாரிகள் செயல்படுத்த மறுத்தனர். இதனால் ராணுவ ஆட்சி மேற்கொள்ளும் கடும் நடவடிக்கைகளுக்கு அஞ்சிய அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் சமீபகாலமாக இந்திய எல்லையை கடந்துள்ளனர்.இதுகுறித்து மியான்மர் நிர்வாகம், இந்திய அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இரண்டு நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவை நீடிக்க எல்லை […]

Categories

Tech |