மாசி மகத்தை முன்னிட்டு மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. கோவில் நகரமான கும்பகோணத்தில் மாசிமகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர், கொட்டையூர் கோடீஸ்வரர் சாமி போன்ற 12 சிவன் கோவில்களில் இருந்தும் சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு மகாமக குளத்தை வந்தடைந்தனர். அதன்பின் மகாமக […]
