ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றே வெளியிட்டு உள்ளார். அதில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக அந்த திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரைக்கிறது. மக்களுக்கான திட்டத்தை மக்களின் விருப்பப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு வல்லுனர் […]
