கொரோனா காலத்தில் சேமிப்பு பணத்தை எடுத்து ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை அண்ணா நகரை சேர்த்த நபர் தான் தமிழகத்தில் முதல் முதலாக கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவரின் நேத்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அப்பகுதி […]
