கலெக்டர் அலுவலகம் முன்பாக மகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னகரம் அருகில் மடம் பகுதியில் வசித்து வருபவர் மேஸ்திரி முனிராஜ். இவருக்கு வினிதா என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளார்கள். வினிதா நேற்று தனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த போது வாசலில் நின்ற காவல்துறையினர் வினிதா வைத்திருந்த பையை சோதனை செய்ய கேட்டார். அப்போது வினிதா பையிலிருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். இதனையடுத்து மண்எண்ணெய்யை […]
