புற்றுநோய் பாதிக்கப்பட்ட மகளுக்காக தாய் மொட்டை அடித்துக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. புற்றுநோய் பாதித்தவர்களுக்கு கீமோதெரபி கதிர்வீச்சு போன்ற கடும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்களது உடல் முழுவதும் முடி கொட்டும் நிலை ஏற்படும். எனவே அவர்கள் தலையை மொட்டையடிப்பார்கள். இது புற்று நோய் பாதித்தவர்களுக்கு, நோயின் தாக்கத்தை விட பல மடங்கு துன்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறான சூழலில் அவர்களின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தான் ஆதரவளித்து ஊக்கம் அளிப்பர். இந்நிலையில் தற்போது புற்று நோய் […]
