தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் வற்புறுத்தியதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே கந்தபுரத்தை சேர்ந்தவர் மணிவாசகன். இவருக்கு சவுந்திரராஜன்(31)என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த பிரசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரசாந்தியின் தந்தை கண்டித்துள்ளார். […]
