இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது.இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.இதையடுத்து நடந்த 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. […]
