தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக நிலுவையில் உள்ள மகப்பேறு உதவி தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. அதில் சென்னை முதல் இடத்திலும் கோவை இரண்டாவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் லட்சக்கணக்கான பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதனைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. […]
