ஆக்கிரமிப்புகாரர்கள் மிரட்டியதால் மனமுடைந்த பெண் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள ஈரியூர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவருக்கு அம்சா(30) என்ற மனைவியும், ரணீஸ்(11), சபரீஸ்வரன்(9) என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்த நிலையில் இதுகுறித்து அம்சா கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் அம்சாவை தரக்குறைவாக பேசி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அம்சா தனது மகன்கள் […]
