மகனை தாக்கியதாக தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வானகிரி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மதன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் சுதா தனது மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இதற்கிடையே ராஜேந்திரன் ஒருசிலருடன் சுதா வீட்டிற்கு சென்று மகனை அடித்து உதைத்து காரைக்காலில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளார். […]
