தந்தை இறந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் மகனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கிருஷ்ணா நகரில் 92 வயதான முதியவர் வடிவேல் வசித்து வந்துள்ளார். இவரது மகன் 38 வயதான நாராயண மூர்த்தி என்பவர். இந்நிலையில் நேற்று முன்தினம் வடிவேல் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். உடனே மகன் நாராயணமூர்த்திக்கு தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்திக்கு எதிர்பாராமல் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் […]
