விவசாயிகளுடன் போராடிய ஒரு அரசு வென்றதாக சரித்திரம் இல்லை என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 2 வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். […]
