தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் […]
