சென்னையில் நடைபெற்ற ராணுவ தேர்வில் ப்ளூடூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நத்தம்பாக்கத்தில் ராணுவ பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ராணுவ பணிகளுக்கான குரூப் சி தேர்வு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை வட மாநில இளைஞர்கள் உட்பட 1,728 பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வில் பங்கேற்ற வட மாநில இளைஞர்கள் 28 பேர் சிறிய அளவிலான ப்ளூடூத்தை பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுதியது […]
