சொந்த தம்பியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி தாலுகாவில் 59 வயதான விவசாயி சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பியின் மகள் அப்பகுதிலிருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு சின்னப்பன் தனது வீட்டில் நெல் மூட்டைகளை அடிக்கி வைப்பதற்காக செல்ல வேண்டும் என்று கூறி மாணவியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
